படித்ததில் பிடித்த்து....

படித்து முடித்துவிட்டு
பக்குவமாய்
பக்கத்து மேஜை மேல்
படுக்க வைத்தேன்,
பற்றி எரிந்த
புரட்சி பற்றிய
புத்தகம் ஒன்றை.

வாசல் வழியாய்
வந்த காற்றால்
பக்கங்கள்
படபடத்தன.

கீர்த்தி பெற்ற புத்தகம்
கிழிந்து விடப்போகிறது.
துடித்துப் போய்
தூக்கிக் கொண்டேன்.

புத்தகம் தழுவி
பெயர்ந்த காற்று
காதுக்குள் வந்து
மவுனமாய் மொழிந்தது.

புத்தகம் படித்து
நீங்கள் கிழித்தது
ஒன்றுமில்லை
படிக்காமல்
நான் கிழித்து
விடுவேன்
என்று சந்தேகப் படலாமா?

ஒன்றை மட்டும்
உணர்ந்து கொள்
உன்னிலும் நானே
உயர்ந்தவன்.

ஒரு பொறி
கிடைத்தாலும்
ஊதிப் பெரிதாக்கி
ஊழித் தீயாக்குவேன்.

நீயோ
ஊழித் தீயே
கிடைத்தாலும்
உணவு பொறிக்கவே
உபயோகப் படுத்துவாய்

ஆம்
உன்னிலும் நானே
உயர்ந்தவன்.

0 comments: